1994 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற பொதுதேர்தலில் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் அமோக வெற்றியடைந்து 48.94% வாக்குகளை பெற்று அரசியலில் முதன்மைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கொண்டுவந்ததுடன் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திகழ்ந்தது. அரசாங்கத்தில் மூத்த அரசியல்வாதியான திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அமைச்சு கடமையற்ற அமைச்சர் என ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க முன்னிலையில் சத்தியபிரமானம் செய்தார். அதனை அடுத்து அவருடைய மகள் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் பிரதமராக சத்தியஞ்செய்தார்.