Author Archives: kosala

29 ஜூலை 1987 – இந்திய-இலங்கை ஒப்பந்ததிற்கு எதிர்ப்பு

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவில் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியுடன் கைசாதிட்ட இந்திய-இலங்கை ஒப்பந்ததிற்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தார். திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது மகனான எதிர் கட்சி தலைவராகிய தனது மகன் அனுர பண்டாரநாயக்காவுடனம் மற்றைய எதிர் கட்சிகளுடனும் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை கைசாத்திடுவதை எதிர்த்தனர். இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொழும்பு வந்து இறங்கிய அன்று காலையிலே இந்த ஒப்பந்ததிற்கு கண்டனத்தை தெரிவித்து கடிதம் எழுதினார்.

01 ஜனவரி 1986 – குடியுரிமை மீட்டளிப்பு

1980 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட திருமதி பண்டாரநாயக்க அவர்களின் குடியுரிமையை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவில் வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் திரும்ப வழங்கப்பட்டது. இதற்கிடையே காலஞ்சென்ற முன்னால் அமைச்சர் பீலீக்ஸ் டயஸ் பன்டாரநாயக்க அவர்களின் குடியுரிமையையும் இறந்த பின்னர் திரும்ப வழங்கப்பட்டது.

05 நவெம்பர் 1984 – இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலை

1984 ஆண்டு ஒக்டோபர் 31 ம் திகதியில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலை முழு உலகத்தையும் அதிர்ச்சியில் ஆற்றியது. 1956 ஆண்டில் லன்டனில் வைத்து முதல் முதலில் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கும் திருமதி இந்திரா காந்திக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பிலிருந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால பகுதியில் இவர் இருவர்களிடையே நெருங்கிய உறவும் நட்பும் நிலவியதுடன் நம்பிக்கைக்குரிய சிறந்த தலைவராகிய இவரின் அகால மரணத்தையிட்டு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அழ்ந்த கவலைடைந்தார். தனது மகள் சுனேத்திரா

16 ஒக்டோபர் 1980 – குடியுரிமை அகற்றல்

1977 ஆண்டில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியின் பின், ஜயவர்தன அரசாங்கம் விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்ததுடன் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் பதவிக்காலத்தில் அதிகார துஸ்பிரயோகம் செய்யப்பட்டார் என ஆணைக்குழு தீர்பளித்ததின் பிரகாரம் அவருடைய குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவத்தையும் அகற்றப்பட்டது. அதேபோல் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த அமைச்சர் பிலீக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அவர்களின் குடியுரிமையையும் நீக்கப்பட்டது. இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 139 அங்கத்தவர்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை நீக்கும் பிரேரனைக்கு

08 மே 1980 – யுகோஸ்லோவியாவின் ஜனாதிபதி மார்ஷல் ஜோசப் டிட்டோவின் இறுதிசடங்கு

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அணிசேரா இயக்கத்தின் தோழரும் நெருங்கிய நண்பருமான யுகோஸ்லோவியாவின் ஜனாதிபதி மார்ஷல் ஜோசப் டிட்டோவுடன் பல சர்வதேச அரங்குகளில் ஒன்றினைந்து அணிசேரா இயக்கத்தின் நோக்கங்களை எட்டுவதற்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பாடுப்பட்டார். 1980 ஆண்டு மே மாதம் நடந்த மார்ஷல் டிட்டோவின் மரணத்தினையடுத்து இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பெல்கிறேடுக்கு புறப்பட்டு சென்றார். திருமதி பண்டாரநாயக்க அவர்கள் சுகவீனமடைந்துள்ள பொழுது ஜனாதிபதி மார்ஷல் ஜோசப் டிட்டோ யுகோஸ்லோவியாவில் மருத்துவ வசதிகளை

21 ஜூலை 1977 –பொது தேர்தலின் தோல்வி

1972 ஆம் ஆண்டில் குடியரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலான 1977 தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றுமில்லாதபடியான தோல்வியை கண்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எட்டு ஆசனஙகளை மட்டும் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அத்தனகல்லை தொகுதியில் மிக சிறிய வாக்கு வித்தியாசத்திலேயே வென்றார்.

18 மே 1977 – முதலாவது தேசீய சட்ட சபையை கலைத்தல்

1977 ஆண்டு மே மாதத்தில் முதலாவது தேசீய சட்ட சபையை கலைத்ததுடன், இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தை தெரிவு செய்யும் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு ஆயுத்தமானார்.

12 மே மாதம் 1977 – உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் சியர்ஸ் விருது

உணவு மற்றும் விவசாய நிறுவனம் திருமதி பண்டாரநாயக்க அவரகளின் உணவு துறையின் தன்னிறைவுக்காக அளித்த பங்களிப்பை அங்கீகரிப்பும் முகமாக சியர்ஸ் விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பணிப்பாளர் நாயகம் எடோவார்ட் சுவாவுமா அவர்கள் ரோமன் நாட்டு விவசாயதிற்கு சம்பந்தப்பட்ட தேவதையின் பெயரிடப்பட்ட இந்த விருதை திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு கொழும்பில் நடந்த வைபவத்தின் போது கையளித்தார். திருமதி பண்டாரநாயக்க அவர்களின் தலைமைத்துவத்தின் வேறுப்பட்ட பக்கங்களையும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் விவசாய அபிவிருத்தி சம்பந்தமான கொள்கைளையும் நடைமுறைக்கேற்ற அணுகுமுறைகளையும் பற்றி

12 – 18 நவெம்பர் 1976 – ஜப்பானுக்க்கான விஜயம்

கிழக்கு ஆசியாவிற்கான சுற்று பயணத்தின் இறுதியில் டோக்கியோவிற்கு சென்றடைந்த திருமதி பண்டாரநாயக்க அவரகள் ஜப்பானின் பிரதமர் டாக்கியோ மிக்கியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அதிகளவிலான கொடுப்பணவுகளும் வேலைத்திட்டங்களுக்கான உதவிகளையும் வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. மிக்கி மோட்டோ தீவுகள் மற்றும் கொயாட்டோ நகரத்திற்கும் விஜயம் செய்த திருமதி பண்டாரநாயக்க அவர்களை சக்கரவர்த்தி ஹிரே ஹித்தோ மற்றும் பேரரசி கோஜூன் அவர்களாலும் விருநதளிக்கப்பட்டார்;.

08 – 11 நவெம்பர் 1976 – பிலிபீனுக்கான விஜயம்

கிழக்கு ஆசியாவிற்கான சுற்று பயணத்தின் இரண்டாவதாக திருமதி பண்டாரநாயக்க அவர்களும் அவரது தூதுக்குழுவினரும் மனிலாவிற்கு விஜயம் செய்ததுடன் இந்த மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி பர்டினன்ட் மார்கோஸ் மற்றும் அவரது மனைவி இமெல்டா மார்கோஸ் அவர்களால் குதூகலமாக வரவேற்க்கப்பட்டார். இதன் போது வணிகம், தொழிற்துறை, நிதி, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் பலதரப்பட்ட இருதரப்பு விடயங்கள் சம்பந்தமாக பேச்சு வார்தை நடாத்தப்பட்டது. உள்நாட்டு நினைவுகட்டிடங்கள், பிலிபயினின் கலை நிலையம், சமுதாய நலன்புரி மற்றும் போஷாக்கு சம்பந்தப்பட்ட

05 –08 நவெம்பர் 1976 – மலேசியாவிற்கான விஜயம்

கிழக்கு ஆசியாவிற்கான சுற்று பயணமொன்றை மேற்கொண்டு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் முதலில் பிரதமர் தாதுக் ஹுசேன் அவர்களின் அழைப்பை ஏற்று மலேசியாவிற்கு விஜயம் செய்தார். பிரதமர், பதில் பிரதமர் மாதீர் முஹாமட் மற்றும் உள்நாட்டு அமைச்சர் துன் முஹாமுட் காஸாலி அவர்களுடன் நடத்திய பேச்சுவார்தையின் போது இலங்கையின் நிலைப்பாடு சம்பந்தமாக பாராட்டு செய்யபட்டதுடன் குவாலாலம்பூரிலிருந்து கடத்தப்பட்ட விமானத்துக்கு இலங்கையில் மீள எரிபொருள் பெற வசதிகளை ஏற்படுத்திகொடுத்தமைக்கு நன்றியையும் தெரிவிக்கப்பட்டது. மன்னர் யய்யா பெட்ராவினாலும் வரவேற்க்கப்பட்ட திருமதி பண்டாரநாயக்க

08 ஒக்டோபர் 1976 – நோர்வேவிற்கான விஜயம்

ஓஸ்லோவிற்கான விஜயத்தை மேற்கொண்ட திருமதி பண்டாரநாயக்க அவரகள் அங்கு பிரதமர் ஒட்வார் நொட்லியை சந்தித்துடன் அணிசேரா இயக்கத்தினதும் சர்லி அமரசிங்க அவர்கள் தலைமையில் கடற் சட்ட மாநாடுவின் போது இலங்கை வகித்த பங்கையும் சர்வதேச விவகாரங்களில் திருமதி பண்டாரநாயக்க அவரகளின் முயற்சிகளையும் வரவேற்றது. காணி சீர் திருத்த நடவடிக்கைகள், கல்வி விஸ்தரிப்பு திட்டங்கள், பொருளாதார துறையில் முக்கிய அம்சங்களை தேசீய ரீதியில் கட்டுபாடுக்குள் கொண்டுவருதல் மற்றும் சிறந்த சுகாதார வேலைத்திட்டங்கள் போன்ற திருமதி பண்டாரநாயக்க அவரகளின் முயற்சிகளை

30 செப்டெம்பர் 1976 – ஐக்கிய நாடு பொது சபையின் 31 வது கூட்டுத்தொடர்

அணிசேரா இயக்கத்தின் தலைவர் மற்றும் இலங்கை தூதுக்குழுவின் முதல்வர் என்ற வகையில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் ஐக்கிய நாடு பொது சபையின் 31 வது கூட்டுத்தொடரில் உரையாற்றும் போது அணிசேரா இயக்கத்தின் பாத்திரம், பான்டுங் பிரகடணத்தில் உள்ளடக்கப்பட்ட அதன் கொள்கைகள், மற்றும் அனிசேரா இயக்கத்தின் பொருத்தம் என்பனவற்றை உள்ளடக்கி கவனயீர்ப்புச் செய்தார். மேம்பட்ட ஓர் உலகத்தையும் ஐக்கிய நாடு சபையின் சமஸ்தம் மற்றும் நாடுகளிடையே சமத்துவத்தையும் வேண்டினார்.

16 – 19 ஆகஸ்ட் 1976 – அணிசேரா இயக்கத்தின் தலைமைப் பதவி

அணிசேரா இயக்கத்தின் ஐந்தாவது உச்சு மாநாடு கொழும்பில் 1976 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் கூட்டப்பட்டதுடன் 86 நாடுகளைக் கொண்ட இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமை பதவியை திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டது. அணிசேரா இயக்கத்தின் தலைமைத்துவத்தை அல்ஜிரிய ஜனாதிபதி ஹுவாரி புமெடியன் அவர்களிடமிருந்து கையேற்ற திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிடையே நிலவும் இடைவெளியை குறைக்கும் நோக்கில் கூட்டு பொருளாதாரத் தற்சாற்ப்பு தன்மையுடன் அபிவிருத்தி பாதையில் இயக்கத்தை வழிநடத்தினார். அபிவிருத்தியடைந்து வரும்

23 மார்ச் 1976 – மன்னார் வளைகுடாவிற்கும் வங்காள விரிகுடா பிரதேசத்திற்கிடையில் கடற் எல்லை நிர்ணயித்தல்

மன்னார் வளைகுடாவிற்கும் வங்காள விரிகுடா பிரதேசத்திற்கிடையில் கடற் எல்லை சம்பந்தமாக இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் உடன்பட்டு கடற் எல்லைகளை நிர்ணயித்துக்கொண்டார். ஐக்கிய நாடு சபையின் கடற் சட்டங்களின் பின்னணியில் இது மிகவும் முக்கியமாக கருதப்பட்டதுடன் இதணூடாக இலங்கைக்கு தன் கடற் எல்லைக்குள் இருக்கும் வளங்களின் உரிமைகளை ஊர்ஜிதம் செய்வதற்கு உதவியது.

பெப்ரவரி 1976 – மகாவெலி நீர்த்தேக்கத் திட்டம் ஆரம்பம்

பிரதமர் பதவியில் அவருடைய முதல் தவணையில் மகாவெலி நீர்த்தேக்கத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தை அமுல்ப்படுத்திய பின்பு திருமதி பண்டாரநாயக்க அவர்களுடைய அரசாங்கம் மிகவும் எதிர்பாப்புகளைக் கொண்ட இந்த திட்டத்திற்கமைய கண்டி பொல்கொல்லையில் வைத்து திசை திருப்பப்பட்டு வறட்சி மண்டலத்திற்கு நீரப்பாசன வதிகளை ஏற்படுத்தவதற்கு ஆரம்பிகக்கப்பட்ட மகாவெலி திட்டத்தின முதலாம் கட்டத்தை ஆரம்பித்தது.

28 ஜனவரி 1976 – பர்மாவிற்கான விஜயம்

1976 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி ரன்கூன் நகருக்கு வந்தடைந்த திருமதி பண்டாரநாயக்க அவர்களை பிரதமர் பிரேகிடியர் ஜெனரல் சேன் வின் வரவேற்று விருந்தளித்தார். பின்பு இவருடன் பேச்சு வார்த்தைகள் தலைநகரில் இடம்பெற்றது. அடுத்ததாக, மண்டாலேவிற்கும் பின்பு பானுக்கும் விஜயம் செய்த அவர் அங்கு பர்மாவின் ஜனாதிபதி ஜெனரால் நே வின் அவர்களை சந்தித்தார். இந்த விஜயத்தின் போது கொலை செய்யப்பட்ட பர்மாவின் தலைவராகிய ஆங்க் சேன்ங்கின் துணைவியும் அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான கின்

20 ஜனவரி 1976 – இந்தோனோசியவிற்கான விஜயம்

கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணமொன்றின் ஆரம்பத்தில் 1976 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் ஜாகர்த்தாவிற்கு விஜயம் மேற்கொண்டார். இந்தோனோசிய ஜனாதிபதி சுஹார்த்தோவினால் விருந்தளிக்கப்பட்ட இந்த விஜயம் இலங்கையின் அணிசேரா கொள்கையினாலும் பான்டுங் நகரில் 1955 ஆம் ஆண்டில் நடாத்ப்பட்ட ஆசிய அப்பிரிக்க மாநாடுவில் இலங்கையின் செயல்திறமுடைய பங்களிப்பினாலும் இரு நாடுகளிடைய உறவுகளை பலப்படத்துவதற்கு வழிவகுத்தது.

16 டிசெம்பர் 1975 – பகிஸ்தான் ஜனாதிபதி சுல்பிக்கார் அலிபூத்தோ அவர்களின் விஜயம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் பகிஸ்தான் ஜனாதிபதி சுல்பிக்கார் அலிபூத்தோ அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் போது இலங்கை பாராளுமன்றதில் உரை நிகழ்த்தி, 1963 ஆம் ஆண்டில் விஜயம் செய்த ஜெனரல் ஆயுப் கானுக்கு பின்பு இலங்கை பாராளுமன்றதில் உரை நிகழ்த்திய இரண்டாவது பகிஸ்தானிய தலைவரானார். திருமதி பண்டாரநாயக்க அவர்களுடன் பகிஸ்தான் நிலமைகளும் விசேடமாக நாடு பிரிந்த பின்னனியிலுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதுடன் கிழக்கு மற்றும் மேற்கு

செப்டெம்பர் 1975 – ஐக்கிய முண்ணனி கூட்டமைப்பின் பிளவு

1970 ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த ஐக்கிய முன்னனி கூட்டமைப்பு, இலங்கை சமசமாஜக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளிநடப்பு செய்ததின் பின்பு கூட்டமைபுக்குள் பிளவு ஏற்பட்டது. ஆனால், திருமதி பண்டாரநாயக்க அவர்களின் தலைமையில் இயங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசீய சட்ட சபையில் பெரும்பாண்மை பலத்தைக் கொண்டிருந்தது.