Author Archives: kosala

24 ஜூலை 1975 – மெக்சிகோ ஜனாதிபதி லுவிஸ் ஏச்சேவேரியா அல்வாரெஸ்வின் விஜயம்

திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மெக்சிகோ ஜனாதிபதியை சந்தித்து பேசி ஒரு மாத்திற்கு பின்பு மெக்சிகோ ஜனாதிபதி லுவிஸ் ஏச்சேவேரியா அல்வாரெஸ் ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தினூடாக அனிசேரா இயக்கம், சர்வதேசம் முன்னுள்ள பிரச்சினைகள் மற்றும் இரு நாடுகளுடைய உறவுகளை பற்றியும் பேசுவதற்கு சந்தர்பம் கிட்டியது.

18 ஜூன் 1975 – பெண்கள் சம்பந்தமான உலக மாநாடு, மெக்சிகோ

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் முதல் தெரிவின் பதினைந்து வருடங்களுக்கு பின் மெக்ஸிக்கோவில் நடைப்பெற்ற ஐக்கிய நாடு சபையின் பெண்கள் சம்பந்தமான அனைத்துலக மாநாட்டில் உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்ற வகையில் பிரதம உரையை நிகழ்த்தினார். “இங்கு நாங்கள் வேற்றுமைகளை அகற்றுவதில் மாத்திரமின்றி மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு புறக்கணிக்கப்பட்ட மனித இனத்தின் அரைவாசி பேர்களுடைய பங்களிப்பபையும் ஒன்றினைப்பதில் செயற்பட்டுவருகின்றோம்” என்று பெண்களின் பாத்திரத்தையும் அவர்களுடைய பங்களிப்பை பற்றியும் பேசிய பொழுது திருமதி பண்டாரநாயக்க அவர்கள் கருத்து தெரிவித்தார். மெக்சிகோ

10 ஜூன் 1975 – உலகத் தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டத்தொடர், ஜினிவா

அனைத்துலக மகளிர் வருடத்தில் நடைப்பெற்ற உலகத் தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டத்தொடரிலே பிரதம விருந்தினராக கலந்துகொண்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மனித முன்னேற்றத்தில் பெண்களின் பங்கை பற்றி மிகவும் அக்கறை கொண்டவராக இருந்தார். பொதுச்சபையில் பிரதான உரையை நிகழ்த்திய அவர், சமாதானம், நீதி மற்றும் சமத்துவம் அகியவற்றின் முன்னேற்றம் தொடர்பாக புதிய அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். சுவிட்ஸார்ந்தில் தங்கியிருந்த பொழுது 77 குழுவு முன்னிலையிலும் உரை நிகழ்த்தினார்.

29 ஏப்ரல் 1975 – ஜெமைக்காவில் மூன்றாவது பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடு

பிரதமர் மைகல் மான்லியால் வரவேற்று உபசரிக்கப்பட்டு ஜெமைக்காவில் நடத்திய மூன்றாவது பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடு உலகத்தின் கவனம் வியட்னாம் யுத்தத்தை பற்றி கவனம்செலுத்திக் கொண்டிருக்கும் ஓர் கால கட்டத்தில் நடைப்பெற்றது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்த அமர்வின் போது மற்ற தலைவர்கள் மத்தியில் இந்தியாவின் இந்திரா காந்தி, பிரித்தானியாவின் ஹரல்ட் மக்மிலன், சிங்கப்பூரின் லீ குவான் யு மற்றும் பங்களாதேசின் முஜிபர் ரஹ்மான் போன்றுடன் இணைந்து செயற்பட்டார்.

28 ஏப்ரல் 1975 – இராக்கிடமிருந்து எண்ணெய்களுக்கான சலுகைகள்

திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பொதுநலவாய அமர்வுக்கு ஜெமைக்காவுக்கு செல்லும் வழியில் பக்தாத் நகரில் நான்கு நாள் தங்கிருந்தார். பெற்றோலியம் பொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் இயக்கம் எரிபொருளின் விலையை அதிகளவில் உயர்த்தியுள்ள நிலையில் இலங்கை போன்ற நாடுகள் இதன் தாக்கத்தில் பாதிக்கபட்டுள்ள பின்னணியில் தான் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மேற்கூறிய விஜயத்தை மேற்கொண்டார். உப ஜனாதிபதி சதாம் ஹுசெயினுடன் நடத்திய பேச்சுவார்தையின் போது, விலை உயர்வால் அபிவருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை திருமதி பண்டாரநாயக்க அவர்கள்

28 ஜனவரி 1975 – சம்பிய ஜனாதிபதி கெனட் கௌன்டா

அனிசேரா மாநாடுக்கு ஆயுத்தம் செய்துகொண்டு இருக்கும் ஒரு தருனத்தில் திருமதி பண்டாரநாயக்க அவர்களுடன் பல சர்வதேச மேடைகளில் இணைந்தியங்கிய சம்பிய ஜனாதிபதி கெனட் கௌன்டா அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். ஆப்பிரிக்க பிரச்சனைகளையும் அவர்களுடைய கருத்துகளும் உள்ளடக்குவதை பற்றி இருவர்களுடையே நடந்த பேச்சுவார்தையின் போது ஆராயப்பட்டது.

09 டிசெம்பர் 1974 – பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிலையம் நிறுவுதல்

சர்வதேச உறவுத்துறையை பொருத்த வரையில், சர்வதேச புகழுடைய ஒரு நிறுவனத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிலையம் 1974 ஆம் ஆண்டில் டிசெம்பர் மாதம் திருமதி பண்டாரநாயக்க அவர்களால் அங்குராப்பனம் செய்யப்பட்டது. இந்த நிலையம மூலம் சர்வதேச உறவு, சர்வதேச சட்டம் மற்றும் இராஜதந்திரம் என்பவற்றை பற்றி அறிவூட்டப்படும்.

10 நவெம்பர் 1974 – சோவியட் யூனியனுக்கும் ஜோர்ஜியாவிற்கான விஜயம்

1974 ஆம் ஆண்டில் நவெம்பர் மாதம் சோவியட் யூனியனுக்கும் ஜோர்ஜியாவிற்கும் விஜயம் மேற்கொண்டு டஸ்கென்ட், மொஸ்கௌ மற்றும் திபிலஸி போன்ற நகரங்களுக்கு சென்று பார்வையிட்டார். பிரதமர் கொஸிஜின் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அன்றோ கொரம்கியோ அவர்களை சந்தித்த திருமதி பண்டாரநாயக்க அவர்களின் இந்த விஜயம் மூலம் இரு நாடுகளுடைய உறவுகள் மேலும் வலுவடைந்துடன் சோவியட் யூனியன் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கும் அவருடைய தூதுக்குழுவுக்கும் மொஸ்கௌவுக்கு வந்து சென்றடைவதற்கு விஷேட விமானம் ஒன்றும் அனுப்பி வைத்தது.

06 ஒக்டோபர் 1974 – யாழ் பல்கலைகழகம் நிறுவுதல்

1921 ஆம் ஆண்டில் சர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் நிறுவப்பட்ட பரமேஸ்வரா வித்தியாலயத்தில் 1974 ஆம் ஆண்டில் ஒக்டோபர் 06 ம் திகதி பி.ப.2.25 மணிக்கு யாழ் பல்கலைகழகம் திறந்துவைக்கப்பட்டது. இந்த புதிய பல்கலைகழகத்தினூடாக உயர் கல்வி பயிலும் வாய்பு வடக்கு மக்களுக்கு கிட்டியதுடன் கடந்த காலங்களில் இது பல விதத்திலும் முன்னேற்றமடைந்துள்ளது.

10 செப்டெம்பர் 1974 – மேற்க்கு ஜேர்மனிக்கான விஜயம்

சான்சலர் ஹெலமட் ஸ்மிட்டின் அழைப்பின் பேரில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மேற்க்கு ஜேர்மனிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். உலகத்தில் நிலவும் மின்சக்தி நெருக்கடியும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு அதன் தாக்கம் பற்றியும் இரு நாடுகளுடைய இருதரப்பு உறவுகள் சம்பந்தமாவும் இரு தலைவர்களுடைய பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்டது.

04 – 09 செப்டெம்பர் 1974 – பகிஸ்தானுக்கான விஜயம்

1974 ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதத்தில் பகிஸ்தானின் பிரதமர் சுல்பிகார் அலி பூத்தோ அவர்களின் அழைப்பின் பேரில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பகிஸ்தானுக்கான உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது பகிஸ்தானின் மேல் சட்ட சபையையும் தேசீய சட்ட சபையையும் இணைந்த அமர்வின் முன் உரை நிகழ்த்தும் அரிய கௌரமும் பெற்றார். இவ்வாரன சந்தர்பம் இலங்கையிலுள்ள எந்த தலைவருக்குமே கிட்டியதில்லை. திருமதி பண்டாரநாயக்க கராச்சி பிரதேசத்துக்கும் சென்று அங்கு நடைபெரும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

26 ஜூன் 1974 – இலங்கை கச்சிதீவை பெறுதல்

பிரதமர் இந்திரா காந்தியுடன் நடத்திய மும்மரமான பேரப் பேச்சின் பின் இரு நாடுகளுடையே சர்ச்சைக்குள்ளாயிருந்த கச்சிதீவு இலங்கையின் கடற் எல்லைக்குள் இருப்பதென இறுதியாக தீர்மானம் எடுக்கப்பட்டபின் கச்சிதீவின் உரிமை இலங்கைக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டது. பலரால் தீர்பதற்கு முயற்சித்து முடியாமல் போன இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்து இது சம்பந்தமாக இரு பிரதமர்களிடையே உடன்படிக்கையும் கைசாத்திடப்பட்டது.

மார்ச் 1974 – உலக உர நிதியம் உருவாக்கும் முன்மொழிதல்

கொழும்பில் நடைப் பெற்ற ஆசிய மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கான ஐக்கிய நாடு பொருளாதார ஆணைக் குழு முன் முக்கிய உரையாற்றிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள், உலக உர நிதியம் ஒன்றை உருவாக்க முன்மொழிந்தார். இந்த கருத்துக்கு பரவலாக ஆதரவு கிடைத்துடன் இலங்கையும் நியுசீலாண்டும் இணைந்து கொண்டவரப்பட்ட முன்மொழிதலுக்கினங்க ஐக்கிய நாடு பொருளாதார மற்றும் சமுதாய ஆணைக்குழு இந்த நிதியத்தை உருவாக்குவதற்கான தீர்மானத்தை எடுத்தது. உரம் தெகையை அதிகரிப்பதற்கான அவசர செயற் திட்டத்தை தயாரிக்கும் பணியை உணவு

24 ஜனவரி 1976 – தாய்லந்திற்கான விஜயம்

கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டத்தில் திருமதி பண்டாரநாயக்க அவர்களும் அவருடைய தூதுக்குழுவும் பாங்கொக் நகரை வந்தடைந்தது. பிரதமர் குக்ரிட் பிரமாஜான்ட் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சட்டிசாய் சூன்ஹவான் அவர்களுடன் விரிவான பேச்சு வார்த்தைகளை நடத்திய திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மண்ணர் பூமிபொல் ஆடுல்யாடேஜ், ராணி சிரிகிட் மற்றும் அரச குடும்பத்தின் மற்றைய அங்கத்தவர்களையும் இந்த விஜயத்தின் போது சந்தித்தார். மேலும் சியாங்மாய் நகருக்கும் விஜயம் செய்தார்.

22–29 ஜனவரி 1974 – இந்தியாவின் குடியரசு தினத்திற்கு பிரதம விருந்தினராக பங்கேற்றல்

1974 ஆம் ஆண்டில் திருமதி பண்டாரநாயக்க அவர்களை யுகொஸ்லோவியாவின் ஜனாதிபதி ஜோஸப் டிடோ சகிதம் இந்தியாவின் குடியரசு தினத்திற்கு பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டது. உலக தலைவர்களை அழைத்து குடியரசு தினத்தில் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர்களுடன் சிறபிக்கும் ஓர் சரித்திர நிகழ்ச்சி நிரலில் பங்குபற்றும் இந்த அரிய சந்தர்ப்பமும் கௌரவமும் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்திலேயே கிட்டியது.

05 – 09 செப்டெம்பர் 1973 –அல்ஜியர்ஸில் நடந்த நான்காவது அனிசேரா உச்சு மகாநாடு

அல்ஜீரீயா தலைநகரான அல்ஜியர்ஸ் நகரிலே 75 அங்கத்துவ நாடுகள் ஒன்றுகூடி நான்காவது அனிசேரா உச்சு மகாநாடு நடந்ததுடன் இதன் போது சாம்பியாவின் ஜனாதிபதி கெனத் கௌண்டா இயக்கத்pன் தலமை பதவியை ஜனாதிபதி ஹ_வாரி பூமெடியனிடம் ஒப்படைத்தார். இலங்கை குழுவை தலைமைதாங்கி சென்ற திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பொருளாதார அபிவிருத்தியையும் அணிசேரா இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உள்வாங்கி அணிசேரா இயக்கத்தை புதிய பாதையில் செல்வதற்கு வழிவகுத்தார். இதனூடாக பொருளாதார பிரகடனமும் பொருளாதார ஒத்துழைபுக்கான செயற் திட்டம் சம்பந்தமான தீர்மானங்களை

04 செப்டெம்பர் 1973 – வதிகானுக்கான விஜயம்

திருமதி பண்டாரநாயக்க அவர்கள் 1973 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வதிகானுக்கான விஜயத்தை மெற்கொண்டார். இதன் போது பாப்பரசர் போல் வி.ஐ உடன் கஸ்டல் கான்டல்போ வில் தனிபட்ட தரிசனத்தில் ஈடுப்பட்டார். திருமதி பண்டாரநாயக்க அவர்களின் இரண்டாவது ஆட்சியில் முதல் காலப்பகுதியில் பாப்பரசர் போல் வி.ஐ கொழும்புக்கு வந்தடைந்த குறுகிய விஜயத்தின் போதே இவரை சந்திற்கும் வாய்ப்பு திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு கிட்டியது.

17 மே மாதம் 1973 – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபம் அங்குராபனம்

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபத்தை திருமதி பண்டாரநாயக்க, ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ, சீன அரச சட்ட சபையின் உப தலைவர் மாஷல் ஹ்சு ஹியாங்-சியென், சீன அரசாங்க தூதுவர் மற்றும் இலங்கையையும் சீனாவையும் பிரதிநிதித்துவ படுத்தி இரண்டு தொழிளாலர்கள் முன்னிலையில் வைபவ ரீதியாக அங்குராபனம் செய்யப்பட்டது. 1973 ஆம் அண்டு மே மாதம் 17 ஆம் திகதி பி.ப.3.55 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபத்தின் சாவியை தாம்பாளத்தில்

27-29 ஏப்ரல் – இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் விஜயம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் நெருங்கிய நண்பராக கருதப்படும் இந்திய பிரதமர் இந்திரா காந்தி 1973 ஆம் அண்டில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது இலங்கை பாராளுமன்றத்திலும் உரை நிகழ்த்தினார். பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக விரிவான கருத்து பரிமாறப்பட்டதுடன் முக்கியமாக எஞ்சிய இந்திய வம்சாவழி 150,000 மக்களின் பிரஜாயுரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை, இரு நாடுகளிடையே கடல் எல்லைகள் மற்றும் கச்சுதீவின் உரிமை பற்றிய விடயங்கள் என்பன ஆராயப்பட்டது.

8-12 ஆகஸ்ட் 1972 – ஜோர்ஜ்டவுனில் அணிசேரா இயக்கத்தின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு

அணிசேரா இயக்கத்தின் வெளிவிவகார அமைச்சர்களின் முதல் கூட்டம் 1972 ஆம் ஆண்டிலே அகஸ்ட் மாதம் கயானா நாட்டிலே ஜோர்ஜ்டவுனில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு முக்கியமாக இருந்தது ஏனெனில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அடுத்த உச்சி மாநாடு கொழும்பிலே நடாத்தபட வேண்டுமென முன்மொழிந்தபடியாகும். அதேநேரம் அல்ஜீரியா அடுத்த உச்சி மாநாட்டை அல்ஜியச்ஸில் நடாத்தப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தது. கடைசியில், ஜோர்ஜ்டவுன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி தீர்மானங்களுக்கமைய 1973 ஆம் ஆண்டில் அடுத்த உச்சி மாநாடு அல்ஜீரியாவிலும் 1976 ஆம்