Author Archives: kosala

24 ஜூன் – 05 ஜூலை 1972 – சீனாவிக்கான உத்தியோகபூர்வ விஜயம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவுக்கு சென்றடைந்த திருமதி பண்டாரநாயக்க அவர்களை சீன தலைவர் மா ஓ சேதுங், பிரதமர் சௌ என்-லாய் மற்றும் மூத்த சீன தலைவர்களால் மிகவும் பிரியமாக வரவேற்கப்பட்டார். சீன தலைவர்களுடன் பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக விரிவான பேச்சுவார்தைகளை நடத்திய அவர், அவரது அரசாங்கத்தின் ஐந்தாண்டு திட்டம் பற்றி விளக்கமளித்தார். இவரது இந்த முயற்சி கைகூட, சீன அரசாங்கம் உடனடியாக வட்டியற்ற கடணொன்றை நீண்டக்கால அடிபபடையில் வழங்கியது. சர்வதேச உறவுகளை பொறுத்த வரையில், இந்துசமுத்திரம்

22 மே மாதம் 1972 – இலங்கை குடியரசின் பிறப்பு

குடியரசு அரசியலமைப்பை 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ம் திகதி பிரகடணப்படுத்தியதின் விளைவாக அரசாட்சி அந்தஸ்து நீக்கப்பட்டு முழுமையான இறையாண்மையுள்ள சுதந்திர நாடக இலங்கை உருவாக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பின் படி இவ்வளவு காலமும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மகாராணியால் நியமிக்கப்பட்ட ஆளுனர் பதவியை இனிமேல் அரச தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். திரு.வில்லியம் கொபல்லாவ அவர்கள் இலங்கையின் முதல் ஜனாதிபதியானதுடன் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரதமரானார். இலங்கையின் புதிய அரசியலமைப்பை பிரகடனத்துடன் தேசீய

21 ஜனவரி 1972 – அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தை ஸ்தாபித்தல்

காட்சி திரையும் மேடை நாடகங்களும் மட்டும் பொழுதுபோக்காக இருந்த காலக்கட்டத்தில் உள்நாட்டுத் திரைபடத் தொழில்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, திருமதி பண்டாரநாயக்க அவர்களின் முயற்சியின் காரணமாக இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டது. இந்த தொழில்துறைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துக்கொண்டு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் ஒரு முக்கிய பங்கை வகித்தது. மேலும் கடன் திட்டங்களை அமுல் படுத்தியதுடன் திரைப்படங்கள் விணியோகம் சம்பந்தமான முறைகளை ஏற்படுத்தி ஓர் உயர்மட்ட திரைப்படத்தொழில் துறையை ஸ்தாபித்தது.

1972 – விவசாய உற்பத்தித்திறன் சட்டம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கம் காணி உடைமையாளர்கள் ஒத்துப்போகா விட்டால் காணிகளை பறிமுதலாக்கும் அச்சுறுத்தலோடு வைத்துக்கொண்டிருக்கும் காணிகள் சம்பந்தமாக உற்பத்தி தரத்தை வரையறுக்கும் நோக்கோடு விவசாய உற்பத்தித் திறன் சட்டத்தை 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம் பயிர்ச்செய்கை செயற்குழுகளை நீக்கி, விவசாய உற்பத்தித் திறன் செயற்குழுக்களை பயிர்ச்செய்கை செய்யக்கூடிய காணிகளை உரிய முறையிலும் திறனான முகாமைத்துவத்திணூடாகவும் உயர்ந்தபட்ச உற்பத்தித் திறனை அடையும் நோக்கோடு உருவாக்கியது.

1972 – காணி சீர்த்திருத்தச் சட்டம்

நாட்டின் காணிகளுக்கும் ஜீவனோபாயத்திற்கும் நிலவும் கிராக்கியை இனம்கண்டு, திருமதி பண்டாரநாயக்க அவர்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். காணிகளை மீளபங்கீடு செய்வதற்கு பொறுப்பளிக்கப்பட்ட ஆனைக்குழு ஒரு நபருக்கு 50 ஏக்கர் காணி உச்ச வரம்புடனும் ஒரு குடும்பத்தினால் சொந்தமாக வைத்திருக்க முடியும் வீடுகளின் எண்ணிக்கையிலும் கட்டுபாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஏற்பாடுகடாக 5,500 காணி உடைமையாளர்களுக்கு சொந்தமான 400,000 ஏக்கர் காணிகள் பங்கீடு செய்வதற்கு கிடைக்கக்கூடியதாக இருந்தது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மட்டும் பண்டாரநாயக்க மற்றும் ரத்வத்தே

நவெம்பர் 1971 – ஐந்தாண்டு திட்டம்

1971 ஆம் ஆண்டு கடைசியில் திருமதி பண்டாரநாயக்க அவர்களும் அவர்களுடைய அரசாங்கமும் பொருளாதார சுதந்திரத்தையும் பொருளாதார வளர்சியையும் இரட்டைக் நோக்காகக்கொண்ட ஐந்தான்டு திட்டமொன்று அறிமுகப்படுத்தியது. அரசாங்கம் பயணிக்கும் வழியையும் அதன் இலக்கு மற்றும் அபிவிருத்திற்கான செயல் திட்டம் என்பன பற்றி பல நாடுகளின் பாராட்டை பெற்ற இந்த ஐந்தாண்டு வேலைத்திட்டத்தினூடாக தேசிய வளங்களை உபயோகித்து உள்நாட்டுத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வது, தொழில் துறையினரை தாங்கிப்பிடித்தல் மற்றும் மேலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தல் ஆகியவை எதிர்பார்க்கப்பட்டது.

24 ஒக்டோபர் 1971 – ஐக்கிய இராஜ்ஜியதிற்கான விஜயம்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இங்கிலாந்து பிரதமர் எட்வட் ஹீத்தின் விருந்தினராக ஐக்கிய இராஜ்ஜியதிற்கு வந்தடைந்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் வருடத்தில் முதல் பகுதியில் இளைஞர்களின் ஆயுத கிளச்சியை கையாளுவதற்கு ஐக்கிய இராஜ்ஜியத்தினால் வழங்கப்பட்ட உதவிகளை நினைவுகூர்ந்து நன்றியையும் தெரிவித்தார். மகாராணி, பிரதமர் மற்றும் வெளிவிவகாரங்களுக்கான இராஜங்க செயளாலர் சர் டக்லஸ் ஹோம் அவர்களையும் சந்தித்ததுக்கு அடுத்தபடியாக, ஐரோப்பா பொருளாதார சமுதாயதிற்கு பிரிட்டன் இணைந்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி பிரிட்டனின் பொது சந்தை சம்பந்தப்பட்ட

21 ஒக்டோபர் 1971 – கனடாவிற்கான விஜயம்

ஐக்கிய நாடு பொது சபையில் ஏற்படும் பிரச்சினைகள், தெற்கு ஆசியாவில் கொதிக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கைக்கான கனேடிய உதவிகள் ஆகியவை பற்றி திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கும் கனேடிய பிரதமருக்கும் இடையில் பேசப்பட்ட விடயங்களாகும். கனேடிய பிரதமர் பியரே றுடோ 1971 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்திற்கு பரிமாற்றமாக இந்த விஜயமைந்தது. இந்த குறுகிய விஜயத்தின் போது கனேடிய வெளிவிவகார அமைச்சர் மிச்சல் ஸ்றாப் அவர்களையும் இலங்கை வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் சந்தித்தார்.

20 ஒக்டோபர் 1971 – அமெரிக்க ஜனாதிபதி ரிசட் நிக்ஸனுடனான சந்திப்பு

ஐக்கிய நாடு பொது சபையில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் வொஷிங்டனுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொன்டார். இதன் போது அமெரிக்க ஜனாதிபதி ரிசட் நிக்ஸனுடனும் இராஜாங்க அமைச்சர் விலியம் ரொஜர்வுடனும் இருதரப்பு விடயங்கள் சம்பந்தமாக பேச்சுவார்தை நடத்தியதோடு அமெரிக்க முதல் பெண்மனியால் விருந்துமளிக்கப்பட்டார். உப ஜனாதிபதியாக கடமையாற்றும் போது 1953 ஆம் ஆண்டிலே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ரிசட் நிக்ஸன் இலங்கை மீது மிகவும் அக்கறையுள்ளவராக காணப்பட்டார்.

12 ஒக்டோபர் 1971 – ஐ.நா.பொ.சபை – சமாதான மண்டலம்

1971 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடு பொது சபையின் 26 வது அமர்வில் கலந்து கொண்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்திய சமுதிரத்தை சமாதான மண்டலமாக பிரகடனம் செய்ய வேண்டுமென முன்மொழிந்தார். ஐக்கிய நாடு பொது சபையின் செயளாலர் நாயகமாகிய திரு. யு தானுடனும் இது சம்பந்தமான விடயங்களை அவருடன் நடத்திய பேச்சுவார்தையின் போது ஆராயப்பட்டது. இலங்கையும் டன்சானியாவும் இணைந்து கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை இன்னும் பல நாடுகள் ஆதரித்ததுடன் பரவலாக மிகுந்த ஆதரவு

26 செப்டெம்பர் 1971 – செனட்சபையை நீக்குதல்

இலங்கையில் இரண்டு சட்ட சபைகளை கொண்ட ஆட்சி முறைமை அமுலிலிருந்ததுடன் மேல் சட்ட சபை எனும் செனட் சபை 1971 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் இயங்குவதை நீக்கப்பட்டது. செனட் சபை மூலம் முதலில் அரசியலுக்கு அறிமுகமான திருமதி பண்டாரநாயக்க அவர்கள் 1960 ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பின் ஒரு சில மாததிற்குள் குடியரசு அரசியல்யமைப்யொன்றை உருவாக்கும் நோக்கோடு சில அரசியல்யமைப்பு சம்பந்தப்பட்ட திருத்தங்களை செய்துகொண்டிருந்தார்.

ஏப்ரல் 1971 – இளைஞர்களின் கிளச்சி

ஒரு தசாப்தற்கு முன்பு பிரதமர் பதவி முதல்கால கட்டத்திலேயே சதி முயற்சிக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து முறியடித்த திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு இரண்டாவது முறை பிரதமர் ஆட்சிபீடம் ஏறி ஒரு வருடத்திற்ள்ளே இன்னுமொரு சவாலை எதிர்கொள்ள நேரிட்டது. அது மக்கள் விடுதலை முன்னனியின் இளைஞர்களின் ஆயுத கிளச்சியாகும். குறுகிய காலத்திற்குள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட முடிந்ததுடன் அவசரக்கால சட்டத்தின் கீழ் ஆட்சிபுரியும் ஒரு காலக்கட்டம் ஆரம்பமாகியது.

25 ஜனவரி 1971 – கனேடிய பிரதமர் பியரே றுடோவின் விஜயம்

கனேடிய பிரதமர் பியரே றுடோ இலங்கைக்கு மேற்கொண்ட நான்கு நாள் விஜயம் கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையிலேயான உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நட்பு அவருடைய ஆட்சி காலம் பூராவும் நிலவியது. பொதுநலவாய நாடுகளுடையே இலங்கைக்கு நன்மதிப்பு இருந்ததுடன் இரண்டு மொழிகளையும் நான்கு சமயங்களையும் கொண்ட இலங்கை கன்டாவிக்கும் கியுபெக் நாட்டுக்கும் நல்ல உதாரனம் என கனேடிய பிரதமர் பாராட்டினார்.

14 – 22 ஜனவரி 1971 – சிங்கபூரில் நடைப்பெற்ற முதல் பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடு

பொதுநலவாய பிரதமர்களுடைய மாநாடுக்கு பதிலாக ஆரம்பிக்கப்பட்ட பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடுக்கு முதல் முறையாக சமூகமளித்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்திய சமுத்திரததை சமாதான மண்டலமாக உருவாக்கும் அவரது அலோசனையை மீண்டும் தெளிவாக எடுத்துறைத்தார். சிங்கபூரில் கூடிய பொதுநலவாய அரச தலைவர்கள் ரொடேசியா மற்றும் தென் அப்பிரிக்கா சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கவனமாக ஆராய்ந்தனர்.

04 டிசெம்பர் 1970 – போப்பாண்டவர் போல் வி ஐ வின் விஜயம்

1970 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த போப்பாண்டவர் போல் வி.ஐ வை திருமதி பண்டாரநாயக்க அவர்கள் வரவேற்றார். இந்த விஜயம் இரத்மலான விமான நிலையத்திற்கு மட்டும் மட்டுபடுத்தப்பட்டிருந்ததுடன் போப்பாண்டவரொருவரால் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் விஜயம் என்பதால் இது மிகவும் முக்கியமானதாக அமைந்தது.

24 நவெம்பர் 1970 – பண்டாரநாயக்க சர்வதேச மாநாடு மண்டபம் நிர்மானிக்கும் பணி ஆரம்பம்

1964 ஆண்டு சீன பிரதமர் சௌ என் லாயின் விஜயத்தின் போது பிரதமர் எஸ். டபிள்யூ.ர்.டி பன்டாரநாயக்க அவர்களின் ஞாபகார்த்தமாக சர்வதேச மாநாடு மண்டபம் ஒன்றை நிர்மானிக்க கொடுத்த வாக்குறிதிக்கமைய, இந்த மண்டபத்தின் நிர்மான வேலைகளை ஆரம்பிக்கும் மாபெரும் விழா 1970 ஆம் ஆண்டு நொவெம்பர் 24 அம் திகதி திருமதி பண்டாரநாயக்க, ஆளுனர் விலியம் கொபல்லாவ மற்றும் அமைச்சரவை முன்னிலையில் நடைப்பெற்றது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபம் என பெயரிடப்படவுள்ள இந்த மண்டபத்தின் நிர்மான

29 செப்டெம்பர் 1970 – எகிப்திய ஜனாதிபதி நஸார் அவர்களின் இறப்பு

அணிசேரா இயக்கத்தின் முக்கிய முன்னோடி பிரமுகரும் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் நெருங்கிய நண்பரான எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமால் நஸாரின் இறுதிகிரியைக்கு பங்குபற்றுவதற்காக கயிரோ நகருக்கு சென்றார். இவரது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் லுஸாகா நகரில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் வைத்து எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமால் நஸார் அணிசேரா இயக்கத்தின் தலைமைபீடத்தை ஜனாதிபதி கெனத் கௌன்டாவிடம் ஒப்படைக்கும் வைபவத்தில் சந்தித்தார். இதன்போது ரஸ்யாவின் பிரதமர் கொரிஜின், இத்தியொபியாவின் மன்னர்

08 – 10 செப்டெம்பர் 1970 – லுசாகாவில் நடத்திய அனிசேரா இயக்கத்தின் மூன்றாவது உச்சு மகா நாடு

லுசாகாவில் நடத்திய அணிசேரா இயக்கத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் தலமைத்துவத்தை எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நஸார் அவர்களிடமிருந்து ஜனாதிபதி கெனத் கௌன்டா ஏற்றுக்கொண்டார். இலங்கையின் தூதுக்குழுவுக்கு தலமைதாங்கிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள் வல்லரசு சார்ந்த கட்சிகளிடம் வரும் பொருளாதார ரீதியாகவோ இரானுவ ரீதியாகவோ வரும் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் தமது எதிர்பை தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட “அனிசேரா கொள்கைகளை பின்பற்ற முயலும் எனது நாட்டை போன்ற சிறிய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல வித அழுத்தங்கள், பயமுறுத்தல்கள்

26 ஆகஸ்ட் 1970 – சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்களின் விஜயம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் இரண்டாவது பிரதமர் முதல்கால பகுதியில் அவரின் விருந்தினராக இலங்கைக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்கள் விஜயத்தை மேற்கொண்டார். ஊலகலாவிய சுற்று பயணத்தை ஆரம்பித்து முதலாவதாக கொழும்புக்கு வந்தடைந்த பிரதமர் லீ குவான் யூ அவர்கள் சில வாரங்கள் தங்கிருந்து திருமதி பண்டாரநாயக்க அவர்களுடன் பல தரப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக விரிவான பேச்சு வார்தைகளில் ஈடுபட்டார். இங்கு தங்கிருந்த காலப்பகுதியில் பேராதெனிய பல்கலைகழகத்துக்கும் விஜயம் செய்தார்.

29 மே மாதம் 1970 – இரண்டாவது முறையாக பிரதமர் பதவியில் சத்தியபிரமாணம் செய்தல்

இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரதமர் பதவியில் விலியம் கொபல்லாவ முன்னிலையில் சத்தியபிரமானம் செய்தார். பிரதமர் பதவியில் கடமைகளுக்கு அதிகபடியாக, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சும், திட்டமிடல் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சுகளையும் பொறுப்பேற்று கடமை புரிந்தார்.