இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவும் பதற்ற நிலமையை தீர்பதற்க்கு கொழும்பு மகாநாட்டின் போது எடுக்கப்பட்ட யோசனைகளுக்கு இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேருவின் உடன்பாட்டை எதிர்பார்த்தார். “யுத்தத்தினால் எந்த பிரச்சினையும் தீர்க்க படுவதில்லை என்பது சரித்தரத்தில் கற்றுக்கொண்ட பாடம் என நான் நினைக்கிறேன். யுத்தம் மேலும் பல பிரச்சினைகளையே உருவாக்கும்”-என்று திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இதன் போது கருத்து தெரிவித்தார்.
பிரதமர் இந்திரா காந்தியுடன் நடத்திய மும்மரமான பேரப் பேச்சின் பின் இரு நாடுகளுடையே சர்ச்சைக்குள்ளாயிருந்த கச்சிதீவு இலங்கையின் கடற் எல்லைக்குள் இருப்பதென இறுதியாக தீர்மானம் எடுக்கப்பட்டபின் கச்சிதீவின் உரிமை இலங்கைக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டது. பலரால் தீர்பதற்கு முயற்சித்து முடியாமல் போன இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்து இது சம்பந்தமாக இரு பிரதமர்களிடையே உடன்படிக்கையும் கைசாத்திடப்பட்டது.
கொழும்பு மகாநாட்டின் ஆழ்ந்தாராய்வின் யோசனைகளை சீன அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்காக திருமதி பண்டாரநாயக்க அவர்கள் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் உடன்பாடான பதில்களை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு அமைதியான தீர்வொன்றுக்காக பண்டாரநாயக்க அவர்கள் எடுக்கும் முயற்ச்சிக்கு சீனா தனது நன்றிக்கடனையும் தெரிவித்தது. பான்டுங் கொள்கைகளை திரும்பவும் உறுதிசெய்வதற்கு இந்த விஜயம் ஓர் சந்தர்பமாக அமைந்ததுடன் இக்கொள்கைகளையும் பான்டுங் மனப்பான்மையை பின் பற்றி இந்த பிரச்சினை மட்டுமல்லாது இப்பிராந்தியத்தில் உருவாகும் எல்லா பிரச்சினைகளையும் சமாதானமாகவும் விரைவாகவும் தீர்வு காண முடியுமென இணக்கம் கானப்பட்டது.
அணிசேரா இயக்கத்தின் ஐந்தாவது உச்சு மாநாடு கொழும்பில் 1976 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் கூட்டப்பட்டதுடன் 86 நாடுகளைக் கொண்ட இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமை பதவியை திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டது. அணிசேரா இயக்கத்தின் தலைமைத்துவத்தை அல்ஜிரிய ஜனாதிபதி ஹுவாரி புமெடியன் அவர்களிடமிருந்து கையேற்ற திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிடையே நிலவும் இடைவெளியை குறைக்கும் நோக்கில் கூட்டு பொருளாதாரத் தற்சாற்ப்பு தன்மையுடன் அபிவிருத்தி பாதையில் இயக்கத்தை வழிநடத்தினார். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அபிலாஷைகளை வலியுறுத்தி வணிக துறையின் விஸ்தரிப்புக்கு ஆதரவுயளிக்கும் வகையில் “புதிய உலக பொருளாதார முறைமையொன்றை” உருவாக்கப்பட்டது. அணிசேரா இயக்கத்தின் ஐந்தாவது உச்சு மாநாடு சீன அரசாங்கத்தால் அன்பளிக்கப்பட்டு புதிதாக நிர்மானிக்கப்பட்ட பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபத்தில் நடைப்பெற்றதுடன் இதனூடாக இலங்கையை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிடையே ஒரு முக்கியமான அந்தஸ்த்திற்கு கொண்டு சென்றது.
குடியரசு அரசியலமைப்பை 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ம் திகதி பிரகடணப்படுத்தியதின் விளைவாக அரசாட்சி அந்தஸ்து நீக்கப்பட்டு முழுமையான இறையாண்மையுள்ள சுதந்திர நாடக இலங்கை உருவாக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பின் படி இவ்வளவு காலமும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மகாராணியால் நியமிக்கப்பட்ட ஆளுனர் பதவியை இனிமேல் அரச தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். திரு.வில்லியம் கொபல்லாவ அவர்கள் இலங்கையின் முதல் ஜனாதிபதியானதுடன் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரதமரானார். இலங்கையின் புதிய அரசியலமைப்பை பிரகடனத்துடன் தேசீய சட்டசபை ஏழாவது பாராளுமன்றத்துக்கு பதிலாக இயங்கும். முதலாவது தேசீய சட்ட சபை நான்கு வருடங்களுக்கு பின்பு 1977 ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி கலைக்கப்பட்டது.