1971 ஆம் ஆண்டு கடைசியில் திருமதி பண்டாரநாயக்க அவர்களும் அவர்களுடைய அரசாங்கமும் பொருளாதார சுதந்திரத்தையும் பொருளாதார வளர்சியையும் இரட்டைக் நோக்காகக்கொண்ட ஐந்தான்டு திட்டமொன்று அறிமுகப்படுத்தியது. அரசாங்கம் பயணிக்கும் வழியையும் அதன் இலக்கு மற்றும் அபிவிருத்திற்கான செயல் திட்டம் என்பன பற்றி பல நாடுகளின் பாராட்டை பெற்ற இந்த ஐந்தாண்டு வேலைத்திட்டத்தினூடாக தேசிய வளங்களை உபயோகித்து உள்நாட்டுத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வது, தொழில் துறையினரை தாங்கிப்பிடித்தல் மற்றும் மேலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தல் ஆகியவை எதிர்பார்க்கப்பட்டது.