கண்டியின் பான்ஸ் இரத்வத்தே திசாவ மற்றும் மகாவெலதென்ன வலவ்வேயின் ரொசலின் மகாவெலதென்ன குமாரிஹாமி என்ற தம்பதிகளுக்கு பிறந்த சிறிமாவோ, குடும்பத்தின் பான்ஸ், பற்றீசியா, மகீ, சீவலீ, மற்றும் கிலிபட் ஆகிய ஆறு பிள்ளைகளின் மூத்தவராவர். ரட்டே மஹாத்மயா எனும் அவருடைய தந்தை ஆட்சி புரிவதில் முழுமையாக ஈடுபட்டிருந்ததுடன் தாயார் குடும்ப தலைவி பொறுப்புக்கு மேலதிகமாக கிராமவாசிகளுக்கு தேசீய வைத்திய முறைப்படி சிகிச்சை அளிப்பது சம்பந்தமாக புகழும் மதிப்பும் பெற்றிந்தார். குழந்தை பருவத்தின் பெரும் பகுதியை பலங்கொடையிலும் மஹாவெலகதன்னையிலும் கழித்த இளம் சிறிமாவோ, பலங்கொடையிலுள்ள மழலையர் பள்ளிக்குச் சென்று கல்வியை ஆரம்பித்து பிறகு இரத்தினபுரியிலுள்ள பர்கஸன் உயர் பாடசாலையில் கல்வியை தொடர்ந்தார். அதன் பிறகு, கொழும்பில் சென்ட் பிறிஜட் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்ற இவரின் கல்லூரி வாழ்கையின் அதிக கால பகுதியில் பெண் சாரணராக இருந்துள்ளார்.