பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள கிராமபுர நிலமைகளை மேம்படுத்துவதற்காகவும் அக்கிராமவாசிகளின் சமுதாய மற்றும் பொருளாதார நிலமைகளை உயர்த்துவதற்கும் நோக்காக கொண்டு 1930 ம் ஆண்டில் வைத்தியர் மேரி இரத்தினத்தினால் நிறுவப்பட்ட லங்கா மஹிலா சமித்திய (எல் எம் ஸ்) என்ற ஓர் மகளிர் இயக்கம் இயங்கி வந்தது. திருமணமாகி சில நாட்களுக்கு பிறகு, சமூக சேவையை இலட்சியமாகக கொண்ட சிறிமாவோ பண்டாரநாயக்க பல மகளிர் இயக்கங்களில் இணைந்து கொண்டதுடன் 1941 ஆம் ஆண்டில் லங்கா மஹிலா சமித்திய (எல் எம் ஸ்) எனும் மகளிர் இயக்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். “எல் எம் ஸ்” எனும் இந்த இயக்கம், அதன் முதல் பத்தாண்டு காலப் பகுதியிலேயே கிராமிய முன்னேற்றம் சம்பந்தமான எல்லா விடயங்களையும் அணுகி சுகாதாரம் மற்றும் சுத்தம்சம்பந்தமான பிரச்சினைகள், தொழில்முனைவு மற்றும் குடிசைத் தொழில்கள், கல்வி ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளுக்கான பங்களிப்பை வழங்கியது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் இவ்வாறான சமூக சேவை வேலைகள் இவரை தூர கிராமங்களுக்கு விஷேடமாக மேற்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மகாணங்களிலுள்ள பின்தங்கிய பிரதேசங்களுக்கு கொண்டு சென்றது. வறுமை ஒழிக்கும் மற்றும் கிராமிய அபிவிருத்தி மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கங்களை கொண்ட “எல் எம் ஸ்” இயக்கத்தின் உயர் இலட்சியங்களை ஆதரித்து ஊக்கமளித்து அறிவுரை செய்து கொண்டு சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களை சந்திப்பது, அவர்களுடைய தினசரி வாழ்க்கை போராட்டங்கள் சம்பந்தமான கதைகளுக்கு செவிமடுத்தலின் ஊடாக தான் பெற்ற அனுபவங்கள் மூலம் ஏழைகளின் பிரச்சினைகள் பற்றி தெளிவான புரிந்துணர்வு ஏற்பட்டது. பல வருடங்களுக்கு பின்பு, இவ்வாறான அனுபவங்கள் அவருக்கு பலன் தருவதாக அமைந்தது. “எல் எம் ஸ்” இயக்கத்தில் சுமார் இருபது வருடங்கள் உறுப்பினராக இருந்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள், பொருளாளராக எட்டு வருடங்களும் உப தலைவராக இரண்டு வருடங்களும் பின்பு தலைவராகவும் கடமையாற்றி, 1960 ஆம் ஆண்டில் பிரதமராக தெரிவான பிறகு தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.