• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

03 ஒக்டோபர் 1940 –எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்கவுடன் திருமணம்

மகாவெலதென்ன வலவேயின் மூத்த மகள் ஹொரகொல்ல பெரிய முதலியார் சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்காவின் மகனுடனான திருமணம் அவர்களின் குடும்ப பரம்பரை வழக்கங்களுடன் மிகவும் சிறப்பாக மற்றும் ஆடம்பரமான முறையில் நடாத்தப்பட்டது. அப்பொழுது சுகாதார மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக கடமையாற்றி வந்த சொலமன் வெஸ்ட் ரிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க பலங்கொடைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தின் போது முதன் முறையாக இவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதுதான் இவர்களுடையே இடம் பெற்ற முதல் சந்திப்பாகும். 03 ஒக்டோபர் 1940 திகதி நடந்த திருமண உறவுக்கு வழிவகுத்தது இந்த சந்திப்பேயாகும். 1925 ஆம் வருடத்தில் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகி, 1931 முதல் சட்ட சபையில் அங்கத்தவராக பணிப்புரிந்த எஸ்.டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க, 1937 ம் ஆண்டில் சிங்கள மகா சபாவை உருவாக்கினார். 1951 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திர கட்சியை நிறுவிய பின்னர் 1956 ஆம் ஆண்டில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டு 1959 செப்டெம்பர் 25 திகதி கொலைகாரன் ஒருவனால் துப்பாக்கியால் வெடி வைக்கும் வரை பணிப்புரிந்ததுடன் துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட காயங்களினால் அடுத்த நாள் உயிரிழந்தார். திருமணத்திற்கு சற்று பின்பு, இந்த இளம் தம்பதிகள் “வெண்ட்வர்த்” என்ற தங்களது ஒன்றாய் வாழும் முதல் இல்லத்திற்கு குடியேறினார்கள். பின்னர், கொழும்பு – 07 ரொஸ்மிட் பிலேஸில் அமைந்துள்ள “டின்டஜெல்” எனும் இல்லத்திற்கு சென்று வசித்தனர்.