• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

09 – 14 ஒக்டோபர் 1963 – ஜக்கிய அராபிய குடியரசுக்கான விஜயம்

இலங்கைவுடன் இராஜதந்திர உறவு ஸ்தாபிக்க முன்பு 1956 ஆம் ஆண்டு எகிப்த்து நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட முக்கூட்டு ஆக்கிரமிப்பின் போது, இலங்கை மேற்கொண்ட நிலைபாட்டின் காரனமாக இலங்கை மீது மிகவும் நன்மதிப்பு கொண்ட எகிப்திய மக்கள் சார்பாக திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு ஜனாதிபதி காமல் அப்துல் நஸார் மற்றும் பிரதமர் அலி சப்ரி அவர்களால் நல்வரவேற்பு அளிக்கப்பட்டது. அயுதக்குறைப்பு மற்றும் தெற்கு வியட்நாமின் பதற்ற நிலமையும் பேச்சு வார்தைக்கான நிகழ்ச்சி நிரலில் முதலிடம் இடம் பெற்றிருந்துடன் இந்த சந்திப்பின் போது இலங்கையின் தேயிலை அதிக பங்கினை கொள்முதல் செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது. சிரியாவுடன் இனைந்து ஐக்கிய அரேபிய குடியரசை நிறுவிய எகிப்த்து, இலங்கைவுடன் சேர்ந்து சீன இந்திய எல்லை தகராறின் உச்ச கட்டத்தில் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்பதிலும் யுத்தத்தை தவிர்க்கவும் கடினமாக உழைத்து முக்கியமான பங்கினை வகித்தது. அலெக்ஸென்றியா மற்றும் லக்ஸோர் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அங்கு மேற்கொள்ளபட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அவைகளை துரிதபடுத்தும் நடைமுறைகளையும் பார்வையிட்டார்.