15 பெப்ரவரி 1989 – பொதுத்தேர்தலில் தோல்வி
1988 ஆம் ஆண்டில் டிசெம்பர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த பின்பு, 1989 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கி தேர்தலுக்கு முகம்கொடுத்து 67 தொகுதிகளை மட்டும் பெற்று பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியின் தலைவியாக அமர்ந்தார்.