Monthly Archives: அக்டோபர் 2015

26 ஜூன் 1974 – இலங்கை கச்சிதீவை பெறுதல்

பிரதமர் இந்திரா காந்தியுடன் நடத்திய மும்மரமான பேரப் பேச்சின் பின் இரு நாடுகளுடையே சர்ச்சைக்குள்ளாயிருந்த கச்சிதீவு இலங்கையின் கடற் எல்லைக்குள் இருப்பதென இறுதியாக தீர்மானம் எடுக்கப்பட்டபின் கச்சிதீவின் உரிமை இலங்கைக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டது. பலரால் தீர்பதற்கு முயற்சித்து முடியாமல் போன இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்து இது சம்பந்தமாக இரு பிரதமர்களிடையே உடன்படிக்கையும் கைசாத்திடப்பட்டது.

08 ஜனவரி 1963 – கொழும்பு மாநாட்டின் ஆலோசனைகளுக்கு சீனாவுடன் உடன்பாடு தேடுதல்

கொழும்பு மகாநாட்டின் ஆழ்ந்தாராய்வின் யோசனைகளை சீன அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்காக திருமதி பண்டாரநாயக்க அவர்கள் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் உடன்பாடான பதில்களை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு அமைதியான தீர்வொன்றுக்காக பண்டாரநாயக்க அவர்கள் எடுக்கும் முயற்ச்சிக்கு சீனா தனது நன்றிக்கடனையும் தெரிவித்தது. பான்டுங் கொள்கைகளை திரும்பவும் உறுதிசெய்வதற்கு இந்த விஜயம் ஓர் சந்தர்பமாக அமைந்ததுடன் இக்கொள்கைகளையும் பான்டுங் மனப்பான்மையை பின் பற்றி இந்த பிரச்சினை மட்டுமல்லாது இப்பிராந்தியத்தில் உருவாகும் எல்லா பிரச்சினைகளையும் சமாதானமாகவும் விரைவாகவும் தீர்வு காண முடியுமென