கொழும்பு மகாநாட்டின் ஆழ்ந்தாராய்வின் யோசனைகளை சீன அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்காக திருமதி பண்டாரநாயக்க அவர்கள் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் உடன்பாடான பதில்களை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு அமைதியான தீர்வொன்றுக்காக பண்டாரநாயக்க அவர்கள் எடுக்கும் முயற்ச்சிக்கு சீனா தனது நன்றிக்கடனையும் தெரிவித்தது. பான்டுங் கொள்கைகளை திரும்பவும் உறுதிசெய்வதற்கு இந்த விஜயம் ஓர் சந்தர்பமாக அமைந்ததுடன் இக்கொள்கைகளையும் பான்டுங் மனப்பான்மையை பின் பற்றி இந்த பிரச்சினை மட்டுமல்லாது இப்பிராந்தியத்தில் உருவாகும் எல்லா பிரச்சினைகளையும் சமாதானமாகவும் விரைவாகவும் தீர்வு காண முடியுமென இணக்கம் கானப்பட்டது.