• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

காலவரிசை


14 ஒக்டேபர் 2000 – கடைசி பயனம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் இறந்த செய்தி உலக ஊடகங்களில் தலமை செய்திகளாக வந்தது. உலகமெங்கும் மக்கள் இப்பிடியான முன்மாதிரியான தலைவர் ஒருவரை இழந்த சோகத்தில் துயரப்பட்டு கொண்டிருந்தனர். பெண்களின் விமோசனத்திற்கு வழிவகுத்து, அணிசேரா கொள்கைகளை பேணி பாதுக்காத்து மேம்படுத்தி மற்றும் அபிவருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரச்சினைகளை உலகதிற்கு கோடிட்டு…

10 ஒக்டேபர் 2000 – ஒரு யுகத்தின் முடிவு

2000 ஆம் நடைப்பெற்ற பொது தேர்தலில் நிட்டம்புவ சங்க போதி மகா வித்தியாலயத்தில் வாக்களித்து விட்டு தனது கடைசி குடியுரிமை கடமையையும் செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அமைதியான முறையில் இறந்தார். பொது சேவைக்கு அர்பனித்த ஒரு தனிசிறப்பான வாழ்க்கை இவ்வாரு முடிவுக்கு வந்தது.

10 ஆகஸ்ட் 2000 – பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தல்

சுகயீனம் காரணமாக, திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து அரசியலில் இருந்து விலகியிருக்க விருப்பபட்டார். 84 வயதில் பிரதமர் பதவியிலிருந்து விலகும் போது அவர் உலகத்திலேயே அதிக வயதுடைய பிரதமராக இருந்ததுடன் அவருடைய நான்கு தசாப்த அரசியல் வாழ்கை முடிவுக்கு வந்தது. இந்த காலத்தினுள் அவர்…

14 நவெம்பர் 1994 – ஜனாதிபதி தேர்தல்

பொதுத் தேர்தல் நடப்பெற்று சில மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் 1994 நவெம்பர் மாதத்தில் நடாத்தப்பட்டது. திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் 62% வாக்குகளை பெற்று அமோக வெற்றி ஈட்டியதுடன் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து ஜனாதிபதியாக பதவியேற்றார். திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றார்.…

19 ஆகஸ்ட் 1994 – அமைச்சு கடமையற்ற அமைச்சர்

1994 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற பொதுதேர்தலில் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் அமோக வெற்றியடைந்து 48.94% வாக்குகளை பெற்று அரசியலில் முதன்மைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கொண்டுவந்ததுடன் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திகழ்ந்தது. அரசாங்கத்தில் மூத்த அரசியல்வாதியான…

11 ஜூன் 1994 – பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் நிறுவுதல்

தொழில் ரீதியாக வெளிவிவகார சேவையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இராஜதந்திர (தூதர்) பயிற்சி நிலையம் ஒன்று நிறுவதற்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார். இதற்காக, திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இலங்கையில் முதல் வெளிவிவகார சேவையில் ஈடுபட்ட மூத்த தொழில் ரீதியான தானாதிபதியான…

09 மார்ச் 1989 – இரண்டாவது முறையாக எதிர்கட்சி தலைவர் பதவி

பாராளுமன்றத்திற்கு தெரிவானதிற்கு பிறகு 1989 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் பாராளுமன்றம் கூட்டப்பட்ட போது திருமதி பன்டாரநாயக்க அவர்களை எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ம் திகதி பாராளுமன்றம் கலைக்கும் வரை இந்த பதவியை வகித்தார்.

15 பெப்ரவரி 1989 – பொதுத்தேர்தலில் தோல்வி

1988 ஆம் ஆண்டில் டிசெம்பர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த பின்பு, 1989 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கி தேர்தலுக்கு முகம்கொடுத்து 67 தொகுதிகளை மட்டும் பெற்று பாராளுமன்றத்தில்…

19 டிசெம்பர் 1988 – ஜனாதிபதி தேரதலில் தோல்வி

முதல் முறையாக 1988 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் போட்டியிட்டார். அவருடைய நிலைபாட்டடை தெளிவாக அறிவித்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்ததிற்கும் அரசியலமைப்புக்கு மேற்கொண்ட 13 வது திருத்தம், இந்திய இரானுவம் இலங்கையில் தங்கியிருந்தல் மற்றும் அரசியல் எதிரிகளை பலிவாங்குதல் மற்றும் மனித…

13 நவெம்பர் 1988 – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடல்

1988 டிசெம்பர் 19 திகதியில் ஜனாதிபதி தேர்தல் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்ததுடன், திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது வேட்பு மனுகளை சமர்பித்ததுடன் முதல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிட்டம்புவையில் ஆரம்பித்து வைத்தார். திரும்பவும் பிரதான அரசியலுக்கு பிரவேசித்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் நாடு பூராவும் தேர்தல் பிரசார நடவடிக்கையில்…

29 ஜூலை 1987 – இந்திய-இலங்கை ஒப்பந்ததிற்கு எதிர்ப்பு

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவில் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியுடன் கைசாதிட்ட இந்திய-இலங்கை ஒப்பந்ததிற்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தார். திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது மகனான எதிர் கட்சி தலைவராகிய தனது மகன் அனுர பண்டாரநாயக்காவுடனம் மற்றைய எதிர் கட்சிகளுடனும் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை…

01 ஜனவரி 1986 – குடியுரிமை மீட்டளிப்பு

1980 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட திருமதி பண்டாரநாயக்க அவர்களின் குடியுரிமையை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவில் வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் திரும்ப வழங்கப்பட்டது. இதற்கிடையே காலஞ்சென்ற முன்னால் அமைச்சர் பீலீக்ஸ் டயஸ் பன்டாரநாயக்க அவர்களின் குடியுரிமையையும் இறந்த பின்னர் திரும்ப வழங்கப்பட்டது.

05 நவெம்பர் 1984 – இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலை

1984 ஆண்டு ஒக்டோபர் 31 ம் திகதியில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலை முழு உலகத்தையும் அதிர்ச்சியில் ஆற்றியது. 1956 ஆண்டில் லன்டனில் வைத்து முதல் முதலில் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கும் திருமதி இந்திரா காந்திக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பிலிருந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால பகுதியில்…

16 ஒக்டோபர் 1980 – குடியுரிமை அகற்றல்

1977 ஆண்டில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியின் பின், ஜயவர்தன அரசாங்கம் விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்ததுடன் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் பதவிக்காலத்தில் அதிகார துஸ்பிரயோகம் செய்யப்பட்டார் என ஆணைக்குழு தீர்பளித்ததின் பிரகாரம் அவருடைய குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவத்தையும் அகற்றப்பட்டது. அதேபோல் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை…

08 மே 1980 – யுகோஸ்லோவியாவின் ஜனாதிபதி மார்ஷல் ஜோசப் டிட்டோவின் இறுதிசடங்கு

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அணிசேரா இயக்கத்தின் தோழரும் நெருங்கிய நண்பருமான யுகோஸ்லோவியாவின் ஜனாதிபதி மார்ஷல் ஜோசப் டிட்டோவுடன் பல சர்வதேச அரங்குகளில் ஒன்றினைந்து அணிசேரா இயக்கத்தின் நோக்கங்களை எட்டுவதற்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பாடுப்பட்டார். 1980 ஆண்டு மே மாதம் நடந்த மார்ஷல் டிட்டோவின் மரணத்தினையடுத்து இறுதி அஞ்சலி…

21 ஜூலை 1977 –பொது தேர்தலின் தோல்வி

1972 ஆம் ஆண்டில் குடியரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலான 1977 தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றுமில்லாதபடியான தோல்வியை கண்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எட்டு ஆசனஙகளை மட்டும் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய…

18 மே 1977 – முதலாவது தேசீய சட்ட சபையை கலைத்தல்

1977 ஆண்டு மே மாதத்தில் முதலாவது தேசீய சட்ட சபையை கலைத்ததுடன், இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தை தெரிவு செய்யும் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு ஆயுத்தமானார்.

12 மே மாதம் 1977 – உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் சியர்ஸ் விருது

உணவு மற்றும் விவசாய நிறுவனம் திருமதி பண்டாரநாயக்க அவரகளின் உணவு துறையின் தன்னிறைவுக்காக அளித்த பங்களிப்பை அங்கீகரிப்பும் முகமாக சியர்ஸ் விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பணிப்பாளர் நாயகம் எடோவார்ட் சுவாவுமா அவர்கள் ரோமன் நாட்டு விவசாயதிற்கு சம்பந்தப்பட்ட தேவதையின் பெயரிடப்பட்ட இந்த விருதை திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு கொழும்பில்…

12 – 18 நவெம்பர் 1976 – ஜப்பானுக்க்கான விஜயம்

கிழக்கு ஆசியாவிற்கான சுற்று பயணத்தின் இறுதியில் டோக்கியோவிற்கு சென்றடைந்த திருமதி பண்டாரநாயக்க அவரகள் ஜப்பானின் பிரதமர் டாக்கியோ மிக்கியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அதிகளவிலான கொடுப்பணவுகளும் வேலைத்திட்டங்களுக்கான உதவிகளையும் வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. மிக்கி மோட்டோ தீவுகள் மற்றும் கொயாட்டோ நகரத்திற்கும் விஜயம் செய்த திருமதி பண்டாரநாயக்க அவர்களை சக்கரவர்த்தி…

08 – 11 நவெம்பர் 1976 – பிலிபீனுக்கான விஜயம்

கிழக்கு ஆசியாவிற்கான சுற்று பயணத்தின் இரண்டாவதாக திருமதி பண்டாரநாயக்க அவர்களும் அவரது தூதுக்குழுவினரும் மனிலாவிற்கு விஜயம் செய்ததுடன் இந்த மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி பர்டினன்ட் மார்கோஸ் மற்றும் அவரது மனைவி இமெல்டா மார்கோஸ் அவர்களால் குதூகலமாக வரவேற்க்கப்பட்டார். இதன் போது வணிகம், தொழிற்துறை, நிதி, கல்வி…