• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "


ATT00004

அரசியல் வாழ்க்கை

1960 ஆண்டில் சுறுசுறுப்பான அரசியல் களத்திற்கு பிரவேசித்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள், 1960 ஆம் ஆண்டு ஜுலை மாத்தில் இலங்கையின் பிரதமர் என்ற அதிகாரத்தின் உச்ச கட்டத்தையடைந்தார்.

அரசியல் அதிகாரமும் இலங்கையில் ஆட்சி விவகாரங்களில் சம்பந்தப்பட்ட குடும்பத்திலிருந்து வந்து இதே போன்ற குடும்பத்தினுள் திருமனமாகிய இவர், சிறுவயதிலிருந்தே அரசியல் விடயங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவராக இருந்தார். அக்கால கட்டத்தில் முன்னணியில் திகழ்ந்த அமைச்சரான திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் திருமனமாகியதால் இவருடைய அந்தஸ்து இன்னும் மேலோங்கியது. கனவரின் படுகொலைக்கு பின்னர் அவரது சுறுசுறுப்பான அரசியலுக்கு பிரவேசம், அவருடைய மறைந்த கணவரால் நிறுவப்பட்ட கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கும் படி சிறிலங்கா சுதந்தர கட்சியின் அங்கத்தவர்களின் விடாப்பிடியான வேண்டுகோள் ஆகிய வற்றின் விளைவாக இலங்கையிலே முதல் முறையாக ஓர் கட்சியின் முதல் பெண் தலைவர், முதல் பெண் பிரதமர் மற்றும் பின்னர் முதல் எதிர் கட்சி பெண் தலைவர் என்ற ரீதியில் முதல் முறையாக மாற்றங்களை காணக்கூடியதாக இருந்தது. இவ்வளவு காலமும் ஆண்களின் ஆதிக்கத்திலிருந்த அரசியல் களத்திற்கு பிரவேசிக்கும் போது உலகளாவிய ரீதியில் அவர் பெற்ற அங்கீகாரம் தலைசிறந்தது.

தனது மறைந்த கணவரின் கொள்கைகளை முன்னெடுத்து கொண்டு, நம்பிக்கையுடன் கையாளும் தனது நடவடிக்கைகளை அறிமுகம் செய்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் கணக்கிட வேண்டிய சக்தியாக தன்னை நிரூபித்தி காட்டினார். 1960 முதல் 1965 ஆம் ஆண்டு வரையான தனது முதல் ஆட்சி காலத்திலும் சரி பின்னர் 1970 ஆண்டில் ஆட்சிபீடம் ஏறிய காலத்திலும் சரி, தேசீய மற்றும் சர்வதேச அரசியல் அரங்கில் தனது பெயரை ஆழமாக பதியவைத்தார். பின்னர் 1994 ஆம் ஆண்டில் வேறுமாதிரியான அரசியலயமைப்பொன்றின் கீழ் பிரதமர் பதவியை ஏற்ற இவர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மற்றுமல்லாது முழு இலங்கையினதும் தாய் ஸ்தானத்திலிருந்து செயற்பட்டார்.

கடுஞ் சோதனையான நிலமையில் பலவந்தமாக அரசியலுக்கு தள்ளப்பட்ட ஒருவரால் மக்களுக்காக 45 வருட பங்களிப்பானது குறிப்பிடத்தக்க விடயமாகும். நாங்கு தசாப்த்தங்களில், எண்ணிறந்த சவால்களுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் முகம் கொடுக்க நேறிட்டாலும், அவைகளை கடந்து தயங்காமல் நம்பிக்கையுடன் முன்னோக்கி சென்றார்.

திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் இலங்கை மற்றும் உலக அரசியல் அரங்கில் ஒளிவிளக்காக திகழ்ந்தார்.